Triplicane | தேர் இழுக்கும் போது திடீரென சாய்ந்த குடை..பார்த்தசாரதி கோயில் தேரோட்டத்தில் பரபரப்பு
Triplicane | தேர் இழுக்கும் போது திடீரென சாய்ந்த குடை..பார்த்தசாரதி கோயில் தேரோட்டத்தில் பரபரப்பு
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்ம பெருமாளின் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தேரோட்டம் டி.பி. கோவில் தெருவில் சென்றபோது, மேலே சென்ற கேபிளில் உரசியதால் தேரின் கலசத்துடன் இணைக்கப்பட்டிருந்த கொடை சாய்ந்தது.
இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாதுகாப்பு கருதி தேரோட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்பிறகு தேரோட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என்ற பக்தி முழக்கத்துடன் பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர்
