மாணவிக்கு முத்தம் கொடுக்க பாய்ந்த காமுகன்... ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த கதி - திருச்சியில் அதிர்ச்சி

x

திருச்சியில் கல்லூரி மாணவிக்கு மர்மநபர் முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வாசலில் நின்றிருந்த மாணவிக்கு, மர்மநபர் ஒருவர் முத்தம் கொடுக்க முயற்சித்த நிலையில் மாணவி கூச்சலிட்டுள்ளார். மர்மநபர் தப்பிச்சென்ற நிலையில், அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் பெண்ணுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆட்டோ ஓட்டுநர்தான் பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றதாக நினைத்து, சிலர் அவரை தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்