கோவிலில் உள்ள பிரசன்ன விநாயகர் சன்னதிக்கு பின்புறம் உள்ள தோட்டத்தை, ஊழியர்கள் தூய்மைப்படுத்திக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு குழி தோண்டிய போது, பழமையான உண்டியல் வடிவிலான செப்பு பாத்திரம் இருந்துள்ளது. அதில் தலா மூன்றரை கிராம் எடை அளவுள்ள 504 தங்க நாணயங்களும்,10 கிராம் எடை அளவுள்ள ஒரு தங்க நாணயம் என, மொத்தம் 505 நாணயங்கள் கிடைத்துள்ளன. இந்த தங்கப் புதையல் திருச்சி மாவட்ட வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை சீல் வைத்த அதிகாரிகள், இந்த நாணயங்கள் எந்த காலத்தை சேர்ந்தவை என்பதை ஆராய, தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.