

ஆடைகள் அற்ற நம்பெருமாள் திருமேனியை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய ஆன்மிக ஆர்வலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாளுக்கு 7 திரைகள் போடப்பட்டு, ஆடைகள், ஆபரணங்கள் அணிவது வழக்கம். இதனால், நம்பெருமாள் திருமேனியை பக்தர்கள் யாரும் கண்டதில்லை என தெரிகிறது. இந்த நிலையில், ரங்கராஜன் என்பவர் ஆடைகள் இல்லாத நம்பெருமாள் திருமேனியை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.