திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும்.." - காங்கிரஸ் கட்சியினர் அதிரடி கைது

x

'திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும்.." - முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் அதிரடி கைது

காமராஜர் குறித்து பேசிய விவகாரத்தில், தி.முக எம்.பி. திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ.சி சிலையிலிருந்து ஊர்வலமாக கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். பின்னர் திருச்சி சிவா எம்பி வீட்டை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டுமென, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சரவணன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்