Trichy Siva |Senthil Balaji |செந்தில் பாலாஜி வந்ததும் எழுந்து நின்ற நிர்வாகிகள்-திருச்சி சிவா ஆவேசம்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி சாலையில், திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி சிவா மேடையில் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜி தாமதமாக வந்தபோது மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் எழுந்தனர். அப்போது திருச்சி சிவா பேச்சை நிறுத்திவிட்டு கோபமடைந்தார். யாராக இருந்தால் என்ன? அவர் பாட்டுக்கு வருவார் என்றும், தான் அடி வயிற்றிலிருந்து பேசிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, செந்தில் பாலாஜி, திருச்சி சிவாவுக்கு சால்வை அணிவித்து, பின்னர் நாற்காலியில் அமர்ந்தார்.
Next Story
