

திருச்சி மாவட்டம், மணப்பாறை, துவரங்குறிச்சியில் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கியில் பணம் எடுத்து விட்டு வீடு திரும்பும் முதியவர்களை குறி வைத்து, கவனத்தை திசை திருப்பி, மர்ம நபர்கள் கொள்ளையடித்து வந்தனர். இதுதொடர்பாக, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதன்அடிப்படையில், சித்தூரை சேர்ந்த பாபு, மோகன், ரமணா, சரவணா ஆகியோரிடம் 3 லட்சம் ரூபாய், 4 செல்போன் மற்றும் 3 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நால்வரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.