பைனான்சியரை கடத்திச் சென்று கொலை : மர்ம கும்பலுக்கு போலீசார் வலை

திருச்சியில் பைனான்சியரை கடத்திச் சென்று கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்
பைனான்சியரை கடத்திச் சென்று கொலை : மர்ம கும்பலுக்கு போலீசார் வலை
Published on

திருச்சி வரகனேரியைச் சேர்ந்தவர் பைனான்சியர் சோமசுந்தரம் காரில் சென்ற போது பால்பண்ணை அருகே கடத்தப்பட்டதார். இந்நிலையில், சோமசுந்தரமின் சடலத்துடன் ஓட்டுனர் பாபு திரும்பினார். இதனையடுத்து பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கண்களை கட்டி கடத்தி செல்லப்பட்டதாகவும், விழித்து பார்த்த போது அவர் சடலமாக கிடந்ததாகவும் அவர் தெரிவித்தார். விசாரணையில் சோமசுந்தரம் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. .இந்த கொலை பணம் கொடுக்கல் வாங்கலினால் நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக நடந்ததா என காந்தி மார்க்கெட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காரின் ஓட்டுனர் பாபுவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com