திருச்சியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை

திருச்சியில், இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை
Published on

திருச்சி, உறையூரை சேர்ந்த ஜிம் மணி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செந்தில், புகழேந்தி ஆகியோருக்கும், கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது செந்தில், புகழேந்தி இருவரும் ஜிம் மணியை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜிம் மணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக செந்தில், புகழேந்தி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்த புகழேந்தி, உறையூர் காவல்நிலையத்தில் 9 நாட்களாக கையெழுத்திட்டு வந்துள்ளார். அதன்படி, இன்று கையெழுத்திட சென்ற போது, சின்ன செட்டத் தெருவில், மர்ம நபர்கள் சிலர் புகழேந்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பி சென்றனர். இதில் புகழேந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழிக்கு பழி வாங்க கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com