புதிய மின்மாற்றி பொருத்தம் - பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மின்மாற்றி கோரி, பொதுமக்கள் இறுதி அஞ்சலி போராட்டம் நடத்தியதை தொடர்ந்து புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டது.
புதிய மின்மாற்றி பொருத்தம் - பொதுமக்கள் மகிழ்ச்சி
Published on
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, மின்மாற்றி கோரி, பொதுமக்கள் இறுதி அஞ்சலி போராட்டம் நடத்தியதை தொடர்ந்து புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டது. புதிய மின்மாற்றி வேண்டும் என்பது கூடத்திபட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்நிலையில் இறுதி அஞ்சலி போராட்டம் குறித்து தகவலறிந்த மின்சார வாரிய அதிகாரிகள், நேற்று இரவு உடனடியாக மின் மாற்றி எடுத்து வந்து சம்மந்தப்பட்ட மின்கம்பத்தில் பொருத்தினர். இதையடுத்து இன்று காலை மின்மாற்றியில் மின்கம்பிகள் முழுவதுமாக இணைக்கப்பட்டு மின்மாற்றி செயல்பாட்டுக்கு வந்தது. முன்னதாக அதிகாரிகள் மின்மாற்றிக்கு பூஜை செய்து மின் இணைப்பை வழங்கினர்.
X

Thanthi TV
www.thanthitv.com