கோவிலுக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள் - காவடி ஆட்டத்தை கண்டு ரசித்த மக்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு சென்ற பக்தர்கள் ஓரிடத்தில் கூடி நின்று காவடி ஆட்டம் ஆடினர். இதனை பலரும் கண்டு ரசித்தனர்.
கோவிலுக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள் - காவடி ஆட்டத்தை கண்டு ரசித்த மக்கள்
Published on

கரூர் மாவட்டம், அய்யர்மலை, கன்னப்பிள்ளையூர், ரெத்தினம்பிள்ளை புதூர் உள்ளிட்ட 10 கிராம மக்கள் ஆண்டுதோறும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சித்திரை மாதம், கார்த்திகை நட்சத்திர தினத்தன்று, கோயிலில் வழிபாடு நடத்துவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விராலிமலைக்கு சென்றனர். இதையடுத்து, திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு சென்ற பக்தர்கள் ஓரிடத்தில் கூடி நின்று காவடி ஆட்டம் ஆடினர். இதனை பலரும் கண்டு ரசித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com