திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னரே, பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து தெரியவரும் என்று திருச்சி எஸ்.பி. ஜியாஉல்ஹக், தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று கூறினார்.