

சூரியூரில் காலை 9 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 3.15 மணி வரை நடைபெற்றது. இதில் 588 காளைகள் மற்றும் 344 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான கார்த்திக் என்பவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த பிரசாந்த் என்பவருக்கு 'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் ஃபிரிட்ஜ் பரிசாக வழங்கப்பட்டது. இதுபோல, சிறந்த காளைக்கான பரிசு பெற்ற வீரா என்ற காளையின் உரிமையாளர் தனபாலுக்கு 'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் ஃப்ரிட்ஜ் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு பெண் உட்பட 26 பேர் காயமடைந்தன