விமானங்கள் மீது லேசர் ஒளி வீச்சு - போலீஸ் விசாரணை | Trichy | Flight | Laser Light | Thanthi TV
திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் மீது லேசர் ஒளி வீசப்படுவதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம் தேதி இரவு சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் விமானம் பறந்தபோது, அதன்மீது லேசர் ஒளி வீசப்பட்டது. இதனால் விமானத்தை தரையிறக்க முடியாமல் விமான பைலட் தடுமாறி உள்ளார். இதுகுறித்து திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 30 நிமிடங்கள் விமானம் வானில் வட்டமடித்ததாகவும், 37 நிமிடங்கள் தாமதமாகவே விமானம் தரையிறங்கியதாகவும் தகவல் வெளியானது. இதேபோல, மலேசியா, துபாய் விமானங்கள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யார் என்பது குறித்து திருச்சி விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
