தசைத்திறன் பாதிப்பால் அவதிப்படும் குழந்தைகள் - தாயாருக்கு சத்துணவு உதவியாளர் பணி வழங்க கோரிக்கை

தசைத்திறன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, அவர்களின் தாயாருக்கு சத்துணவு உதவியாளர் பணி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தசைத்திறன் பாதிப்பால் அவதிப்படும் குழந்தைகள் - தாயாருக்கு சத்துணவு உதவியாளர் பணி வழங்க கோரிக்கை
Published on

திருச்சி மாவட்டம், கல்லணை அருகே கவுத்தரநல்லூரை சேர்ந்தவர் பெயிண்டர் செந்தில்குமார். இவருக்கும், இவரது சொந்த அக்கா மகளுக்கு 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், அவர்களுக்கு பிறந்த 2 பெண் குழந்தைகளும் தசைத் திறன் பாதிப்பு நோயால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறும் நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்ட இவர்களால், பேசவோ, தங்களது வேலைகளை செய்து கொள்ளவோ முடியாது. செந்தில்குமாருக்கு பெயின்டர் வேலை கிடைப்பதும் அரிதாக உள்ளதால், குழந்தைகளை பராமரிக்க ஏதுவாக, அந்த ஊரில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியை வழங்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com