திராவிடர் கழக கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் செருப்பு வீச்சு

திருச்சி தாராநல்லூரில் திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்குள் புகுந்து இந்து முன்னணியினர் கலாட்டாவில் ஈடுபட்டனர்.

திருச்சி தாராநல்லூரில் திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்குள் புகுந்து இந்து முன்னணியினர் கலாட்டாவில் ஈடுபட்டனர். நாற்காலி மற்றும் செருப்புகள் வீசப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் போஜராஜன், மணிகண்டன் ஆகியோர் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவினர் மேடையின் அருகே செருப்பை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது நாற்காலிகளும் சரமாரியாக வீசப்பட்டன. இரு தரப்பனரும் மோதிக்கொண்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

X

Thanthi TV
www.thanthitv.com