காப்பகத்தில் சட்ட விரோதமாக சிறுமிகள் தங்க வைக்கப்பட்ட வழக்கு : ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

திருச்சி உள்ள தனியார் காப்பகத்தில் தங்கியுள்ள பெண்களின் சான்றிதழ்களை சரி பார்க்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் சமூக நலத்துறை அலுவலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
காப்பகத்தில் சட்ட விரோதமாக சிறுமிகள் தங்க வைக்கப்பட்ட வழக்கு : ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Published on
திருச்சி உள்ள தனியார் காப்பகத்தில், தங்கியுள்ள பெண்களின் சான்றிதழ்களை சரி பார்க்க கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர், சமூக நலத்துறை அலுவலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த, கிதியோன் ஜேக்கப் என்பவர் நடத்தி வந்த, காப்பகத்தில், 89-க்கும் மேற்பட்ட சிறுமிகள் சட்டவிரோதமாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் தங்க வைக்கப்பட்டிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ரவிச்சந்திர பாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி நீதிபதிகள் அமர்வு, இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com