வங்கியில் கொள்ளை போன விவகாரம: "கர்ப்பிணியை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர்" - பெண்ணின் தந்தை புகார்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கூட்டுறவு வங்கி கொள்ளை தொடர்பாக, கர்ப்பிணியை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
வங்கியில் கொள்ளை போன விவகாரம: "கர்ப்பிணியை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர்" - பெண்ணின் தந்தை புகார்
Published on
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்ப்பமாக உள்ள கிருஷ்ணவேணியை 3 நாட்கள், வீட்டிற்கு அனுப்பாமல் போலீசார் விசாரணை நடத்தி வருவது நியாயம் அல்ல என அவரது தந்தை ராஜூ புகார் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்களிடம் இதுவரை எந்தவித விசாரணையும் நடத்தவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com