பழங்குடியினருக்கான வீடுகளை ஏமாற்றி விற்றதாக புகார் - நீதிபதிநேரடி விசிட்

நீலகிரி மாவட்டம் தேவர் சோலை பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், அப்பகுதிக்கு சென்ற மாவட்ட தலைமை நீதிபதி தலமையிலான நீதிபதிகள், அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு, அவர்கள் பல ஆண்டுகளாக வாங்க முடியாமல் இருந்த பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்கினர். அப்போது ஒருவர், நெலாக்கோட்டை ஊராட்சியில் தங்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளை, சிலர் ஏமாற்றி விற்று வருவதாக புகார் தெரிவித்தார். இதனைக்கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக புகாரளிக்குமாறும், கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com