தேர்வு எழுத 16 கி.மீ. செல்லும் மாணவர்கள் : வாகனம் ஏற்பாடு செய்து தந்த கல்வித்துறை

கோவை ஆனைக்கட்டி பழங்குடியின மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத 16 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்வதை கருத்தில் கொண்டு கல்வித்துறை வாகன வசதி செய்து தந்துள்ளது.
தேர்வு எழுத 16 கி.மீ. செல்லும் மாணவர்கள் : வாகனம் ஏற்பாடு செய்து தந்த கல்வித்துறை
Published on
கோவை ஆனைக்கட்டி பழங்குடியின மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத 16 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்வதை கருத்தில் கொண்டு கல்வித்துறை வாகன வசதி செய்து தந்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத, ஆனைகட்டியில் இருந்து, 16 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சின்னதடாகத்தில் உள்ள தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்காக வாகனத்தை கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் ஆனைக்கட்டியிலேயே அடுத்த ஆண்டு முதல் தேர்வு மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com