சென்னை பல்லவன் இல்லத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மின்சார பேருந்தின் பராமரிப்பு பணி மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் பணியை, தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.