Transgender Protest | திடுதிடுவென ஓடிய திருநங்கை.. பின்னாலே காப்பாற்ற ஓடிய ரிப்போர்ட்டர்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகளால் பரபரப்பு நெல்லையில் இலவச வீட்டுமனை வழங்ககோரி சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகளால் பரபரப்பு ஏற்பட்டது. தாங்கள் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலிலேயே சாலை மறியல் செய்தனர். போராட்டத்தின்போது ஒரு திருநங்கை பாலத்தில் இருந்து ஆற்றில் குதிக்க முயற்சித்தார். அவரை செய்தியாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் காரையும் அவர்கள் மறித்தனர். இந்நிலையில் இலவச வீட்டு மனை வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story
