திடீரென பயங்கரமாய் தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்.. அலறி ஓடிய மக்கள்

x

சென்னை தியாகராய நகரில் மின்மாற்றி தீப்பிடித்து எரிந்ததால், பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த மேற்கு மாம்பலம் துரைசாமி சாலை சுரங்கப்பாதை அருகே, சாலை ஓரம் இருந்த மின்மாற்றி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்து தீயணைப்புத் துறையினர், மின்வாரிய உதவியுடன் மின்சாரத்தை துண்டி விட்டு, தீயை முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயர் மின்னழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் பொருட்கள் ஏதும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்