டிரான்ஸ்பர் செய்யப்பட்ட நீதிபதி.. போலீசாரை தேடி தேடி சென்று செய்த செயல் - நெகிழ்ச்சி வீடியோ

x

சென்னையில் இருந்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு பணிமாறுதலாகி செல்லும் தலைமை நீதிபதி ஸ்ரீராம், விமான நிலையத்தில் காவலர்கள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகளை தேடிச் சென்று கைகுலுக்கி விடைபெற்றுச் சென்றார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அவர், ராஜஸ்தான் செல்வதற்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, அங்கிருந்த போலீசார் மற்றும் உயர்நீதிமன்ற அதிகாரிகளுடன் கைகுலுக்கி விடை பெற்றுச் சென்றார். ஒவ்வொருவரையும் நீதிபதி தேடி வந்து விடை பெற்றுச் சென்றது போலீசாரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்