குரூப்-1 மெயின் தேர்வர்களுக்கு மனிதநேயம் கல்வியகத்தில் பயிற்சி

x

குரூப்-1 மெயின் தேர்வர்களுக்கு மனிதநேயம் கல்வியகத்தில் பயிற்சி

சென்னையில் இயங்கி வரும் சைதை துரைசாமியின் மனிநேயம் IAS கட்டணமில்லா கல்வியகத்தில், TNPSC குரூப் 1- முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வில், மனிதநேயம் கட்டணமில்லா கல்வியத்தில் பயின்ற 37 மாணவிகள், 30 மாணவர்கள் என 67 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு முதன்மைத் தேர்வு எழுத ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மனிதநேய மாணவர்கள் மட்டுமன்றி, இதர மாணவர்களுக்கும் ஊக்கத்தொகையுடன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக, நேரில் வந்து பதிவு செய்ய முடியாதவர்கள், இணையதளம் மூலம் பதிவு செய்யவும், மாணவர்கள் வீட்டிலிருந்தே பயிற்சி பெற காணொளி வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்