பயிற்சி செவிலியர் மரணம் - உறவினர்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சியில் பயிற்சி செவிலியர் உயிரிழந்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகள் சூர்யகலா தனியார் கிளினிக்கில் செவிலியராக பயிற்சி பெற்று வந்த நிலையில் முள்வேலி மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வரும் நிலையில், சூரியகலா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட அவரது உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
