Train | Train Booking | ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் - வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழ் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகப் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும், சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல், வரும் 10-ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், மறுமார்க்கத்தில் 15-ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கும் ரயில்கள் இயக்கப்படும். மேலும், ஏப்ரல் 13-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கும், மறுநாள் 14-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பண்டிகை கால கூட்ட நெரிசலைத் தவிர்க்க இந்த ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
