ரயில் டிக்கெட் புக்கிங் - மொத்தமாக மாறும் விதிகள்

x

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள், இனி ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்புகளில் பயணம் செய்ய இயலாது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த புதிய உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி காத்திருப்பு டிக்கெட் இருந்தால், அவர்கள் பொது வகுப்பு பெட்டியில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐஆர்சிடிசி (IRCTC) மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் டிக்கெட் உறுதிப்படுத்தப்படாவிட்டால் அது தானாகவே ரத்து செய்யப்படும். முன்பதிவு டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் பயணம் செய்யும் போது, அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்