19 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை To பட்டுக்கோட்டை மக்களுக்கு வெளியானஇன்ப செய்தி
புதிய பாம்பன் பாலம் திறப்பு விழாவின் போது தாம்பரம் - ராமேஸ்வரம் தினசரி இரவு நேர ரயில் சேவை தொடங்கியதன் மூலம் பட்டுகோட்டை வழியாக சென்னைக்கு இரவு ரயில் சேவை தொடங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்டுகோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த தஞ்சாவூர் திமுக எம்பி முரசொலி மேளதாளம் முழங்க ரயில் ஓட்டுனர்களுக்கு வரவேற்பு அளித்தார் இதே போல பாஜகவினரும் வரவேற்பு அளித்தனர். கடந்த 2006ம் ஆண்டு கம்பன் விரைவு ரயில் நிறுத்தப்பட்டதற்கு பின்னர் 19 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
Next Story
