தீபாவளிக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது - இரண்டே நிமிடங்களில் அனைத்து இடங்களும் நிரம்பின

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்கிய நிலையில், நவம்பர் 2ஆம் தேதி செல்லும் ரயிலில் இரண்டே நிமிடங்களில் அனைத்து இடங்கள் நிரம்பின
தீபாவளிக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது - இரண்டே நிமிடங்களில் அனைத்து இடங்களும் நிரம்பின
Published on

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிக்கைக்கான முன்பதிவு 120 நாட்களுக்கு முன்னர் தொடங்கும். இதே போல் நவம்பர் இரண்டாம் தேதிக்கான முன்பதிவு சென்னை எழும்பூர் ரயில்வே நிலையத்தில் இன்று காலை தொடங்கியது. பயணச் சீட்டுகளை வாங்குவதற்கு, நேற்று இரவு முதல் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சரியாக எட்டு மணிக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில், இரண்டே நிமிடங்களில் அனைத்து பயணச்சீட்டுகளும் விற்று தீர்ந்தன. முன்பதிவு செய்வதன் மூலம் பண்டிகை நேரங்களில் சரியான நேரத்திற்கு தங்களது ஊருக்கு குடும்பத்துடன் செல்லலாம் என முன்பதிவு செய்துகொண்ட பயணிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com