உருண்டு விழுந்த ராட்சத பாறை - உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து | Ooty | Train | Heavy Rain |Landslide

x

மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம், குன்னூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்த மழையால், மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும், ஹில்குரோவ் -குன்னூர் இடையே ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் ரயில் தண்டவாளம் சேதம் அடைந்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்