Train Latest News | தள்ளுபடி விலையில் ரயில் டிக்கெட் கட்டணம் - ரயில்வே அறிவிப்பு
"ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி"
பயணிகளுக்கு பண்டிகை கால சலுகையாக, ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடியை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
பயணிகளுக்கு டிக்கெட் கட்டண சுமையை குறைக்கும் நோக்கில், அக்டோபர் 13ம் தேதி முதல் 26ம் தேதிக்கு இடையே ஒருவழி பயணத்தை முன்பதிவு செய்துவிட்டு,
பின்னர் இணைப்பு வசதி மூலம் அதே ரயிலுக்கு, நவம்பர் 17 முதல் டிசம்பர் 1ம் தேதி இடையே திரும்பி வரும் பயணத்துக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணச் சலுகை ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் ஒரே நேரத்தில் புறப்பாடு மற்றும் திரும்பி வருவதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்...
இருவழிகளிலும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கே இந்த கட்டண சலுகை கிடைக்கும் என்றும்,
திரும்ப வரும் டிக்கெட்டின் அடிப்படை கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
