ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய நபர் - ரயில் சக்கரம் ஏறி விரல்கள் துண்டான பரிதாபம்

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய நபர் - ரயில் சக்கரம் ஏறி விரல்கள் துண்டான பரிதாபம்
Published on

மயிலாடுதுறையில், ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய நபர் நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்ததில், அவரது விரல்கள் துண்டாகின. அகமதாபாத் செல்லும் ரயிலில், தனது மனைவியை ஏற்றி விட சென்ற பாலசுப்பிரமணியம், ரயில் புறப்பட்டதால் அவசரமாக கீழே இறங்கியுள்ளார். அப்போது நிலைதடுமாறி தண்டவாளத்திற்கும், நடைமேடைக்கும் இடையே விழுந்த பாலசுப்பிரமணியத்தின் கை மீது ரயில் சக்கரம் ஏறியதில் அவரது விரல்கள் துண்டாகின. ரயிலை நிறுத்தி அவரை மீட்ட பொதுமக்கள், பாலசுப்பிரமணியத்தை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com