எதிர்பாரா விதமாக ஏணி பட்டதால் ஸ்பாட்டிலேயே கொடூர மரணம் - மக்களே உஷார்!

x

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - 3 பேருக்கு தீவிர சிகிச்சை

குடோனில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 4பேர் மீது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் குடோனில் கூலிங் சீட் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் 4 பேர் ஈடுபட்டு, இருபது அடி உயர ஏணியை வேலைக்காக தூக்கிச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஏணி மின்சார ஒயரில் உரசியதில், மின்சாரம் தாக்கி முத்து சிவா என்பவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கருப்பசாமி, கார்த்திக், சந்தனகுமார் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்