Qatar வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவருக்கு நேர்ந்த பெரும் சோகம்..விசயம் தெரிந்ததும் கதறும் குடும்பம்
வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவருக்கு நேர்ந்த பெரும் சோகம்... விசயம் தெரிந்ததும் கதறும் குடும்பம் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே, கத்தார் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் வில்சன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முட்டம் கிராமத்தைச் சேர்ந்த இவர், கடந்த 15 ஆண்டுகளாக கத்தாரில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், மாரடைப்பால் காலமானதாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஈரான் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், வில்சனின் உடலை விரைந்து மீட்கத் தமிழக மற்றும் மத்திய அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
