ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த கதி.. ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கணவர்

x

கும்மிடிப்பூண்டி அருகே ஆட்டோ ஓட்டுநர் கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன...

கும்மிடிப்பூண்டி அருகே ஆட்டோ ஓட்டுநரை கடத்தி கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லியை அடுத்த திருமழிசை குண்டுமேடு பகுதியைச் சேந்த ஆட்டோ ஓட்டுநர் அரிகிருஷண்ணன். இவரை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்ற நிலையில், சோழவரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அரிகிருஷண்ன் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் அங்கே சென்றபோது அரிகிருஷ்ணன் இறந்து கிடந்தார். இதுதொடர்பான புகாரின்பேரில், வெள்ளவேடு போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இதில் காயலார்மேடு அஜய், ஞானம், திருமழிசையை சேர்ந்த ராம்குமார் மற்றும் ஹரி ஹர சுதன் ஆகிய 4 பேரும் அரிகிருஷ்ணனை தாக்கிவிட்டு, விபத்தில் காயமடைந்ததை போல நாடகமாடி மருத்துவமனையில் சேர்த்தது அம்பலமானது.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கடன் பிரச்னையில் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்