தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றச் சென்றவர் உயிரிழந்த சோகம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன், குடும்ப பிரச்சனை காரணமாக கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அவரது உறவினர் மருதையா, முருகனை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனிடையே, கிணற்றில் உயிருக்கு போராடிய முருகனை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர்
Next Story
