காய்கறி வாங்க போன இடத்தில் சோகம் - மனைவி கண் முன்னே கணவன் துடிதுடித்து பலி
விபத்து - மனைவி கண்முன்னே கணவன் பலியான சோகம்
திருவள்ளூரில், இருசக்கர வாகனத்தின் மீது மண் குவாரிக்கு சென்ற லாரி மோதிய விபத்தில் மனைவி கண்முன்னே கணவன் துடிதுடித்து உயிரிழந்தார். திருவள்ளூர் ஜெயநகர் பகுதியில் இருந்து காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி ஜெகதீஸ்வரி படுகாயங்களுடன் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் மண் குவாரிகளுக்கு அதிவேகமாக செல்லும் லாரிகளால் இது போன்று விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Next Story
