Chennai | New Born Baby | தாய்ப்பால் கொடுத்தபோது நேர்ந்த துயரம் - துடிதுடித்து நின்ற பிஞ்சின் மூச்சு

தாய்ப்பால் கொடுத்தபோது நேர்ந்த துயரம்

#Chennai | #NewBornBaby | #ThanthiTV Chennai | New Born Baby Death | தாய்ப்பால் கொடுத்தபோது நேர்ந்த துயரம் - துடிதுடித்து நின்ற பிஞ்சின் மூச்சு சென்னையை அடுத்த மாங்காட்டில், தாய்ப்பால் கொடுத்தபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு பிறந்து 10 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சென்னையை அடுத்த மாங்காட்டில் தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு, பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாங்காடு கீழ்ரகுநாதபுரத்தை சேர்ந்த இம்ரான், ஸ்ரீதேவி தம்பதிக்கு 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வழக்கம்போல் ஸ்ரீதேவி தாய்ப்பால் கொடுத்துவிட்டு தூங்க வைக்க சென்றபோது, குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்சில் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com