Ramanathapuram | பசி கொடுமையால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம் - எதுவும் செய்ய முடியாத கணவன்

x

பசி கொடுமையால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

கண்முன்னே இருந்தும் எதுவும் செய்ய முடியாத கணவன்

மனதை ரணமாக்கும் காட்சி

கண் தெரியாத கணவனோடு கடை கடையாக யாசகம் பெற்று வந்த மூதாட்டி பசியால் மயங்கி விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் பி-1 நகர் காவல் நிலையம் முன்பு உள்ள பகுதியில் கண் தெரியாத 80 வயது மூதாட்டி ஒருவர் தனது கணவரோடு கடை கடையாக சென்று யாசகம் பெற்று வந்தார். இந்நிலையில், மூதாட்டி பசியின் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அந்த வழியில் சென்ற வழிப்போக்கர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மூதாட்டியை சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்