ஊர் பேர் தெரியாதவனுக்கு தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - பெண்களே உஷார்
ராசிபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டு, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பட்டணம் சாலை பகுதியை சேர்ந்தவர் அனுபிரியா. திருமணமான இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அவ்வழியாக சென்ற இளைஞர் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது அந்த இளைஞர் அனுபிரியாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நிலையில் அதிர்ச்சியடைந்த அனுப்பிரியா கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்த இளைஞரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் சேலம் சின்ன வீராணம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
Next Story
