Erode | Group 2 | கனவோடு குரூப் 2 தேர்வு எழுதச் சென்ற வனக்காவலருக்கு நேர்ந்த சோகம்

கனவோடு குரூப் 2 தேர்வு எழுதச் சென்ற வனக்காவலருக்கு நேர்ந்த சோகம்

Erode | Group 2 | கனவோடு குரூப் 2 தேர்வு எழுதச் சென்ற வனக்காவலருக்கு நேர்ந்த சோகம்

#erode #group2exam #accident #thanthitv

குரூப் 2 தேர்வு எழுதச் சென்ற வனக்காவலர் விபத்தில் உயிரிழப்பு - சோகம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, குரூப் 2 தேர்வு எழுதச் சென்ற 27 வயது வனக்காவலர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன், தட்டக்கரை வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராகப் பணியாற்றி வந்தார். இன்று ஈரோட்டில் நடைபெறும் குரூப் 2 தேர்வை எழுதுவதற்காக, இருசக்கர வாகனத்தில் பர்கூர் மலைப்பாதை வழியாகச் சென்றார். நெய்க்கரை வளைவு பகுதியில், எதிரே வந்த கர்நாடகப் பதிவெண் கொண்ட டெம்போ வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதினார். இதில் படுகாயமடைந்த நவீன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X