வாக்கிங் சென்ற பேராசிரியருக்கு அதிகாலையில் நடந்த சோகம்
ஈரோடு மாவட்டம் பவானியில் பேராசிரியர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். காலை வழக்கம் போல் வீட்டின் அருகே உள்ள புறவழிச் சாலையில் நடை பயிற்சி சென்று உள்ளார். அப்போது தாயுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மோதியதில் பேராசிரியர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பேராசிரியர் ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
