Brinji | Food Poison| பிரிஞ்சி சாப்பிட்ட 5 பேருக்கு நேர்ந்த சோகம்
பிரிஞ்சி சாப்பிட்ட 5 பேருக்கு நேர்ந்த சோகம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, தனியார் தொழிற்சாலை கேண்டினில் பல்லி விழுந்த பிரிஞ்சி உணவைச் சாப்பிட்ட 5 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. எளாவூரில் உள்ள கேஸ்டிங் பைப் உற்பத்தித் தொழிற்சாலையில் இன்று காலை உணவு சாப்பிட்டபோது, கும்புளியைச் சேர்ந்த பாபு உள்ளிட்ட 5 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#brinjirice #foodpoison #thanthitv
