காட்டுமன்னார் கோவிலில் பிணமாக வீடு திரும்பிய 3 சிறுவர்கள்.. ஊரே கதறும் சோகம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஓடையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். லால்பேட்டையை சேர்ந்த உபயத்துல்லா, முகமது அபில், முகமது பாசித் ஆகிய மூவரும் விடுமுறை தினத்தில் வெள்ளையங்கால் ஓடைக்கு குளிக்கச் சென்று, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர். அவர்களை தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து 3 மணி நேரத்துக்கும் மேலாகத் தேடி சடலமாக மீட்டனர். மூவரின் உடல்களுக்கும் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
Next Story