சென்னையில் துருக்கி நாட்டு கப்பலால் நேர்ந்த விபரீதம்

x

துருக்கி நாட்டு கப்பலால் திருவொற்றியூர் மீனவர்களின் வலை சேதம்

சென்னை திருவொற்றியூர் மீனவர்களின் வலையை, துருக்கி நாட்டு சரக்கு கப்பல் சேதப்படுத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவொற்றியூரை சேர்ந்த எழிலரசன் என்பவர் 5 பேருடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற போது, துருக்கி நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் அவர்களது பைபர் படகை மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. மீனவர்கள் வலையை காப்பாற்ற முயன்றும், கப்பல் வலையை கிழித்துப் சென்றது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு மீனவர்கள் மீன்வள துறையில் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்