கார் விபத்தில் மக்களுக்கு ஏற்பட்ட துயரம்.. ஈரோட்டில் பரபரப்பு....
ஈரோட்டில் அலமேடு அருகே கட்டுப்பாட்டை இழந்த காரானது, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் மோதியால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி பொதுமக்கள் அவதிபட்டனர். 26 வயது ஒரு இளைஞர், திருச்செங்கோடு சாலையில் காரை ஓட்டிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புகளைத் தாண்டி, டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால், மின்சாரம் நீண்ட நேரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதி இருளில் மூழ்கியது. இந்த விபத்தில், படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
