திமுக நிகழ்ச்சியில் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம் -தூக்கி ஓடிய இன்ஸ்பெக்டர்
திமுக நிகழ்ச்சியில் ஒன்றரை வயது குழந்தைக்கு திடீர் வலிப்பு
சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்விற்கு தாயுடன் வருகை தந்த, ஒன்றரை வயது குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அங்கிருந்த காவல் ஆய்வாளர், குழந்தையை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். சிகிச்சைக்கு பின்னர் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது. மருத்துவமனைக்கு வருகை தந்த மண்டல குழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர் கவி.கணேசன், குழந்தையின் நலன் குறித்து விசாரித்து, மருத்துவ செலவையும் ஏற்றுக் கொணடனர்.
Next Story
