கனமழையால் 3,000 உயிர்கள் பலியான சோகம்

x

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கனமழையால் கோழிப்பண்ணையில் இருந்த 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஷாம் வில்லியம்ஸ் என்பவர் நடத்தி வரும் கோழிப்பண்ணைக்கு இரண்டு தினங்களுக்கு முன் 3 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை இறக்குமதி செய்த நிலையில், சூரைக் காற்றுடன் கனமழை பெய்ததால் கோழி பண்ணையின் கூடாரம் இடிந்து விழுந்தது. இதில், மழைநீரிலும் இடிபாடுகளிலும் சிக்கி 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன.


Next Story

மேலும் செய்திகள்