

சென்னையில் உள்ள போக்குவரத்து இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 210-பி அடிப்படையில், சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள், அதை மீறினால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதிய அபராதங்கள் விரைவில் அமலாக உள்ளதால், அனைத்து இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் அனைவரும் தங்கள் கீழ் பணிபுரியும் காவலர்களிடம் வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக போக்குவரத்து விதிகளை பின்பற்ற வலியுறுத்துமாறு கூறியுள்ளார். மீறினால் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.